

மெல்போர்ன் ,
ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் இன்று மெல்போர்னில் உள்ள புகழ்பெற்ற மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் (MCG) நடைபெறுகிறது.
இப்போட்டிக்கான டாஸ் தற்போது போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனால் டி20 தொடரில் வெற்றி பெற்று பதிலடி கொடுக்க ஆஸ்திரேலியா முனைப்பு காட்டும்.
அதே நேரத்தில் ஒருநாள் தொடரில் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து டி20 தொடரையும் கைப்பற்றும் நம்பிக்கையில் இங்கிலாந்து களமிறங்குகிறது.