மகளிர் டெஸ்ட் கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவிடம் படுதோல்வியடைந்த இந்தியா

முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 323 ரன்கள் குவித்தது.
மகளிர் டெஸ்ட் கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவிடம் படுதோல்வியடைந்த இந்தியா
Published on

பெர்த்,

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள், 1 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியாவும், ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவும் கைப்பற்றின.

இதனை தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நேற்று முன் தினம் தொடங்கியது. பகலிரவு ஆட்டமாக நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து களமிறங்கிய இந்தியா முதல் இன்னிங்சில் 198 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனை தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 323 ரன்கள் குவித்தது. இதனால், 125 பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சில் களமிறங்கிய இந்தியா 149 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 25 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் சேர்த்தது.

இதன் மூலம் இந்தியாவை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றிபெற்றது. இந்தியா படுதோல்வியடைந்தது. சிறப்பாக ஆடிய ஆஸ்திரேலிய வீராங்கைனை அனபெல் சதர்லேண்ட் ஆட்டநாயகி விருதை வென்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com