

லண்டன்,
10வது மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது. 12 அணிகள் பங்கேற்றுள்ள மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.
இதில் மான்செஸ்டர் நகரில் இன்று நடைபெற்ற 3வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியே - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 172 ரன்கள் குவித்தது. சிறப்பாக ஆடிய அந்த அணியின் லிட்ச்பில்ட் 50 ரன்களும், எல்லிஸ் பெரி 36 ரன்களும், ஜார்ஜியா வார்ஹம் 32 ரன்களும் சேர்த்தனர்.
இதனை தொடர்ந்து 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா 16.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 107 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்காவை 65 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றிபெற்றது. சிறப்பாக பந்து வீசிய ஆஸ்திரேலியாவின் ஜார்ஜியா வார்ஹம் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.