இந்தியாவில் டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டும் - ஆஸ்திரேலிய வீரர் விருப்பம்


இந்தியாவில் டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டும்  - ஆஸ்திரேலிய வீரர் விருப்பம்
x

Image Courtesy: @ICC

இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.

செயின்ட் ஜார்ஜ்,

இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் ஆட்டத்தில் இந்தியா தோல்வி கண்டு தொடரில் 0-1 என பின்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது.

இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான நாதன் லயன் அளித்த பேட்டியில் கூறியதாவது, ஓய்வு பெறுவதற்குள் இந்தியா மற்றும் இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டும் என்று நான் எப்போதும் சொல்வது உண்டு. அடுத்த 2 ஆண்டுகளில் அதற்கான வாய்ப்பு கிடைக்கலாம். ஆனால் நாம் ஒவ்வொரு டெஸ்ட் போட்டியாக அணுக வேண்டியது அவசியமாகும்.

தற்போது வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் எங்களது பணியை சரியாக செய்ய வேண்டும். இதன் பின்னர் ஆஸ்திரேலியாவில் நவம்பர் மாதம் தொடங்கும் ஆஷஸ் தொடரில் விளையாட இருக்கிறோம். நான் மற்றுமொரு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடுவேன் என்று நம்புகிறேன்.

டெஸ்ட் போட்டி வெற்றிக் கொண்டாட்டத்தின் போது எங்கள் அணியினர் பாடும் பாரம்பரிய பாடலை கடந்த 12 ஆண்டுகளாக முன்னின்று பாடியதை கவுரவமாக கருதுகிறேன். அது என் கிரிக்கெட் வாழ்க்கையின் மிகப்பெரிய சிறப்பம்சங்களில் ஒன்றாகும். இனி இந்த பாடலை அணியின் ஒரு வீரராக இருந்து ரசிப்பேன். இதனால் நான் விரைவில் ஓய்வு பெறப் போகிறேன் என்று அர்த்தம் கிடையாது.

டெஸ்ட் வெற்றிக்கு பிறகு முன்னின்று பாடல் பாடும் எனது பணியை சக வீரரான அலெக்ஸ் கேரியிடம் ஒப்படைத்துள்ளேன். அதற்கு அவர் சரியானவராக இருப்பார் என்று நினைக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

ஆஸ்திரேலிய அணி 2004-ம் ஆண்டுக்கு பிறகு இந்தியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி டெஸ்ட் தொடரை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 37 வயதான சுழற்பந்து நாதன் லயன் 138 டெஸ்டில் விளையாடி 556 விக்கெட்டுகள் எடுத்திருக்கிறார். இதில் இந்தியாவுக்கு எதிராக 130 விக்கெட்டுகள் (32 டெஸ்டில்) வீழ்த்தியதும் அடங்கும்.

1 More update

Next Story