ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பதவியில் தொடருகிறார் கம்மின்ஸ்

கேப்டன் பதவி குறித்து கேள்விகள் எழுந்தன.
ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பதவியில் தொடருகிறார்  கம்மின்ஸ்
Published on: 

ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸுக்கு கிரிக்கெட் ஆஸ்திரேலியா வாரியம் (CA) ஒருமனதாக ஆதரவு தெரிவித்துள்ளது. 2018-ம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நடைபெற்ற பந்தை சேதப்படுத்திய விவகாரம் மீண்டும் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில், கம்மின்ஸின் கேப்டன் பதவி குறித்து கேள்விகள் எழுந்தன. முன்னாள் வீரர் உஸ்மான் கவாஜா தனது சுயசரிதையில், அப்போது ஆஸ்திரேலிய அணியில் இருந்த அனைவருக்கும் பந்தை சேதப்படுத்தும் திட்டம் தெரியும் என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு டேவிட் வார்னர் மற்றும் கேமரூன் பேன்கிராஃப்ட் ஆகியோரும் ஆதரவு தெரிவித்ததால் சர்ச்சை தீவிரமடைந்தது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை கம்மின்ஸ் திட்டவட்டமாக மறுத்தார். தனக்கு மணல் காகிதம் பயன்படுத்தப்பட்டது குறித்தோ, பந்தை சேதப்படுத்தும் திட்டம் குறித்தோ எதுவும் தெரியாது என்று விளக்கமளித்தார்.

கம்மின்ஸ்

இந்தச் சூழலில் கிரிக்கெட் ஆஸ்திரேலியா தலைவர் டேவிட் பூன் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி டாட் கிரீன்பெர்க் ஆகியோர் சிட்னியில் கம்மின்ஸை சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்தச் சந்திப்பில் அவரது நலன், அணிக்கு வழங்க வேண்டிய ஆதரவு மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான வரவிருக்கும் டெஸ்ட் தொடர் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து, கம்மின்ஸின் தலைமைத்துவத்துக்கு வாரியம் ஒருமனதாக ஆதரவு தெரிவித்தது.

நேர்மை

இதுகுறித்து டேவிட் பூன் கூறுகையில், கடந்த 8 ஆண்டுகளாக பாட் கம்மின்ஸ் மற்றும் அணியின் மற்ற தலைவர்கள் உருவாக்கியுள்ள அணியின் கலாசாரத்தைப் பெருமையுடன் பார்ப்பதாகவும், கம்மின்ஸின் நேர்மை குறித்து எழுப்பப்படும் சந்தேகங்களைத் திட்டவட்டமாக நிராகரிப்பதாகவும் தெரிவித்தார்.

X