

சென்னை,
‘எதிர்பார்க்காததை எதிர்பாருங்கள்’ என்பது போல்தான் இருக்கிறது டி20 உலகக் கோப்பை 2026 தொடர். வெஸ்ட் இண்டீஸ் அணி, முதல் அணியாக சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. தற்போது, இலங்கை அணி, ஆஸ்திரேலியாவை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது.
இந்த தோல்வியின் மூலம், ஆஸ்திரேலிய அணி, 3 போட்டிகளில் ஒரேயொரு வெற்றியைப் பெற்று, 2 புள்ளிகளுடன் இருக்கிறது. அடுத்து, கடைசிப் போட்டியில், ஓமனுக்கு எதிராக விளையாடும். இதில், வென்றால், ஆஸ்திரேலியா 4 புள்ளிகளுடன் இருக்கும். இப்போட்டி, வரும் 20-ம் தேதி நடக்க உள்ளது.
ஆஸ்திரேலிய அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறுமா, இல்லையா என்பது ஜிம்பாப்வே கையில்தான் இருக்கிறது. தற்போதுவரை ஜிம்பாப்வே அணி 2 போட்டிகளில் ஓமன், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வென்றுள்ளது. அடுத்து, இன்று அயர்லாந்துக்கு எதிராகவும், 19-ம் தேதி இலங்கைக்கு எதிராகவும் விளையாடும். இந்த இரண்டு போட்டிகளிலும் ஜிம்பாப்வே தோற்றால் மட்டுமே, ஆஸ்திரேலிய அணிக்கு, நெட் ரன்ரேட் அடிப்படையில் சூப்பர் 8 வாய்ப்பு கிடைக்கும்.