

புதுடெல்லி,
10 அணிகள் பங்கேற்கும் 19-வது ஐ.பி.எல். தொடர் 28-ந்தேதி முதல் மே 31-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதையொட்டி, 10 அணி வீரர்களும், பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், ஐ.பி.எல்.-ல் அமலில் இருக்கும் ‘இம்பேக்ட்' வீரர் விதிமு றைக்கு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் அக்ஷர் படேல் அதி ருப்தி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், 'நானே ஒரு ஆல்-ரவுண்டர் என்பதால் இந்த விதி எனக்கு பிடிக்கவில்லை. 'இம்பேக்ட் வீரர்' விதிமுறை அமல்படுத்துதவற்கு முன்பு இந்த இடத்துக்கு ஒரு ஆல்-ரவுண்டரை தேர்ந்தெடுத்தோம். ஆனால் தற்போது அணி நிர்வாகம் ஒரு குறிப்பிட்ட பேட்ஸ்மேன் அல்லது பந்து வீச்சாளரை தேர்ந்தெடுக்கிறது. நமக்கு ஏன் ஆல்-ரவுண்டர் தேவை என்று அவர்கள் சொல்கிறார்கள். நான் ஒரு ஆல்-ரவுண்டர் என்பதால் எனக்கு இது பிடிக்கவில்லை. தனிப்பட்ட முறையில் இந்த விதிமுறை எனக்கு பிடிக்காவிட்டாலும், ஆட்டத்தில் உள்ள விதிகளை மதிக்கவும், பின்பற்றவும் வேண்டும்' என்றார்.