

சென்னை,
10 அணிகள் இடையிலான 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நக ரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடி யத்தில் இன்றிரவு (வெள்ளிக்கிழமை) நடக்கும் 7-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பஞ்சாப் கிங்சை எதிர்கொள்கிறது.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் யார் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்கத்தில் சஞ்சு சாம்சன் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் ருதுராஜ் கெயிக்வாட் 28 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து ஆயுஷ் மாத்ரே சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தார். பந்துகளை நாலாபுறமும் சிதறடித்தார்.
அதிரடியாக விளையாடி ஆயுஷ் மாத்ரே அரைசதம் அடித்து அசத்தினார். அவர் 73 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் ஷிவம் துபே 45 ரன்கள் எடுத்தார்.இதனால் 20 ஓவர்கள் சென்னை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் எடுத்தது.