‘ரிட்டயர்டு அவுட்’ விவகாரம் - ’இதுதான் காரணம் ’… மவுனம் கலைத்த ஆயுஷ் மாத்ரே

ஆயுஷ் மாத்ரே ‘ரிட்டயர்டு அவுட்’ ஆன சம்பவம் பெரும் பேசுபொருளாக மாறியது.
 ‘ரிட்டயர்டு அவுட்’ விவகாரம் - ’இதுதான் காரணம் ’… மவுனம் கலைத்த ஆயுஷ் மாத்ரே
Published on

சென்னை,

சென்னை மற்றும் டெல்லி அணிகள் மோதிய நேற்றைய போட்டியில், சிஎஸ்கே வீரர் ஆயுஷ் மாத்ரே ‘ரிட்டயர்டு அவுட்’ ஆன சம்பவம் பெரும் பேசுபொருளாக மாறியது.

போட்டியின் 17.3வது ஓவரில், 36 பந்துகளில் 59 ரன்கள் (3 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்திருந்த ஆயுஷ் மாத்ரேவை திடீரென சிஎஸ்கே நிர்வாகம் ‘ரிட்டயர்டு அவுட்’ செய்து, அவரை மாற்றி சிவம் துபேவை களமிறக்கியது.

Also Read
லக்னோ அணிக்கு எதிராக குஜராத் பந்துவீச்சு தேர்வு
 ‘ரிட்டயர்டு அவுட்’ விவகாரம் - ’இதுதான் காரணம் ’… மவுனம் கலைத்த ஆயுஷ் மாத்ரே

இந்த முடிவு சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஆயுஷ் மாத்ரே இதுகுறித்து விளக்கம் அளித்தார். அவர் பேசுகையில், “இதில் எந்த தவறும் இல்லை. அப்போது அணிக்கு அதிக பவுண்டரிகள் தேவைப்பட்டது. சிவம் துபேவால் என்னைவிட சிறப்பாக பவுண்டரிகளை அடிக்க முடியும். அதனால் அணியின் நலனுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டது. எனக்கு அணியின் வெற்றிதான் முக்கியம்,” என கூறினார்.

களமிறங்கிய சிவம் துபே, 10 பந்துகளில் 20 ரன்கள் சேர்த்து அணியின் ஸ்கோரை 212 ஆக உயர்த்தினார். பின்னர், டெல்லி அணியை 189 ரன்களுக்கு கட்டுப்படுத்திய சிஎஸ்கே, 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com