ஆஷஸ் டெஸ்ட்: ஜானி பேர்ஸ்டோ சதத்தால் சரிவில் இருந்து மீண்ட இங்கிலாந்து

மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் எடுத்துள்ளது.
ஆஷஸ் டெஸ்ட்: ஜானி பேர்ஸ்டோ சதத்தால் சரிவில் இருந்து மீண்ட இங்கிலாந்து
Published on

சிட்னி,

ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதையடுத்து ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்சில் 416 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அந்த அணியில் உஸ்மான் கவாஜா சதமடித்து அசத்தினார். ஸ்டீவன் ஸ்மித் அரைசதம் அடித்தார். இங்கிலாந்து அணியில் சிறப்பாக பந்துவீசிய ஸ்டூவர்ட் பிராட் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதனை தொடர்ந்து, முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 13 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இன்று மூன்றாம் நாள் ஆட்டம் நடைபெற்றது. ஹசீப் அகமது 2 ரன்னுடனும் சாக் கிராலி 2 ரன்னுடனும் ஆட்டத்தை தொடர்ந்தனர்.

ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் தொடக்க வீரர்கள் இருவரும் ஆட்டமிழந்து நடையை கட்டினர். அடுத்து வந்த டேவிட் மலன் 3 ரன்னிலும், அணியின் நம்பிக்கை நட்சத்திரமான கேப்டன் ஜோ ரூட் ரன் எதுவும் எடுக்காமலும் பெவிலியன் திரும்பினர்.

இங்கிலாந்து அணி தொடர்ச்சியாக 4 விக்கெட்டுகளை இழந்து பரிதவித்த நிலையில், பென் ஸ்டோக்ஸ்சும், ஜானி பேர்ஸ்டோவும், அணியை சரிவில் இருந்து மீட்டனர். பொறுப்புடன் விளையாடிய பென் ஸ்டோக்ஸ் 66 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். சிறப்பாக விளையாடிய ஜானி பேர்ஸ்டோ சதமடித்து அசத்தினார்.

மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் எடுத்துள்ளது. ஜானி பேர்ஸ்டோ 106 ரன்னிலும், ஜாக் லீச் 4 ரன்னிலும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து அணி 158 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. நாளை நான்காம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com