

வங்காளதேச அணியின் ஆல் ரவுண்டர் மஹ்மதுல்லா டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
மஹ்மதுல்லா 2009 ஆம் ஆண்டு டெஸ்டில் அறிமுகமானார் . 50 போட்டிகளில் விளையாடி 33.49 சராசரியில் 2914 ரன்களை எடுத்துள்ளார் , இதில் 5 சதங்கள் மற்றும் 16 அரைசதங்களும் மற்றும் 43 விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்கிறார்.
இதுகுறித்து மஹ்மதுல்லா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ;
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறேன். எனது அறிமுக போட்டியிலும் கடைசி டெஸ்ட் போட்டியிலும் ஆட்ட நாயகன் விருதை பெற்றிருக்கிறேன் , டெஸ்ட் கிரிக்கெட்டில் இது ஒரு அற்புதமான பயணம். எனது குடும்பத்தினர், அணியினர், பயிற்சியாளர்கள் அவர்களின் ஆதரவிற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.என்றார்