வங்காளதேச கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவி காலம் நீட்டிப்பு


வங்காளதேச கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவி காலம் நீட்டிப்பு
x

image courtesy: PTI

தினத்தந்தி 25 March 2025 11:54 PM IST (Updated: 25 March 2025 11:55 PM IST)
t-max-icont-min-icon

வங்காளதேச கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக பில் சிம்மன்ஸ் உள்ளார்.

டாக்கா,

அண்மையில் முடிவடைந்த ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வங்காளதேச அணி ஒரு வெற்றி கூட பெறாமல் படுதோல்வியை சந்தித்தது. இதன் எதிரொலியாக வங்காளதேச அணியில் பல அதிரடி மாற்றங்கள் நிகழும் என்று எதிர்பார்க்கப்பட்டது. பயிற்சியாளர்கள், தேர்வுக்குழு மற்றும் வீரர்கள் என அனைத்திலும் பல மாற்றங்கள் இருக்கும் என்று கூறப்பட்டது.

இருப்பினும் வங்காளதேச அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ள பில் சிம்மன்சின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 2027 ஒருநாள் உலகக்கோப்பை வரை அவர் பதவியில் தொடருவார் என்று வங்காளதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரரான பில் சிம்மன்ஸ் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வங்காளதேச அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியை ஏற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story