கூடுதலாக ஒரு வேகப்பந்து வீச்சாளரை சேர்த்திருந்தால்...வங்கதேச வீரர்

சிறப்பாக இருந்திருக்கும் என வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் தஸ்கின் அகமது தெரிவித்துள்ளார்.
கூடுதலாக ஒரு வேகப்பந்து வீச்சாளரை சேர்த்திருந்தால்...வங்கதேச வீரர்
Published on: 

வங்கதேசம் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில், கூடுதலாக ஒரு வேகப்பந்து வீச்சாளரை அணியில் சேர்த்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் தஸ்கின் அகமது தெரிவித்துள்ளார்.

தஸ்கின் அகமது

சில்ஹெட்டில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, ஒரு கட்டத்தில் 27 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. வங்கதேச வேகப்பந்து வீச்சாளர்களான தஸ்கின் அகமது மற்றும் ஹசன் மஹ்மூத் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஆனால், மூன்று சுழற்பந்து வீச்சாளர்களைத் தேர்வு செய்த வங்கதேச அணியின் முடிவு எதிர்பார்த்த பலனைத் தரவில்லை. தைஜுல் இஸ்லாம், மெஹிதி ஹசன் மற்றும் நயீம் ஹசன் ஆகியோர் இணைந்து 42 ஓவர்கள் வீசியும் ஒரு விக்கெட்டைக் கூட கைப்பற்றவில்லை.

இதுகுறித்து பேசிய தஸ்கின், ஆட்டத்தின் முதல் ஒரு மணி நேரத்தில் ஆடுகளத்தில் இருந்த ஈரப்பதம் காரணமாக பந்து நன்றாக ஸ்விங் ஆனது, கூடுதலாக ஒரு வேகப்பந்து வீச்சாளர் இருந்திருந்தால் நீண்ட நேரம் பந்துவீசி மேலும் சில விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருக்க முடியும். மேலும், ஆடுகளம் நேரம் செல்லச் செல்ல பேட்டிங்கிற்கு சாதகமாக மாறியது. வேகப்பந்து வீச்சாளர்களின் பணிச்சுமையைச் சரியாக நிர்வகிப்பது அவசியம் என்றும் வலியுறுத்தினார்.

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 235 ரன்கள் எடுத்திருந்தது. அமீர் ஜாங்கூ 111 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

X