வங்காளதேசம் - நெதர்லாந்து 3-வது டி20: மழை காரணமாக ஆட்டம் பாதியில் ரத்து

image courtesy:twitter/@BCBtigers
இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை வங்காளதேசம் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
சில்ஹெட்,
நெதர்லாந்து கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் நடைபெற்ற முதல் 2 டி20 போட்டிகளின் முடிவிலேயே வங்காளதேசம் அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி விட்டது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையேயான 3வது டி20 போட்டி சில்ஹெட்டில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணியின் கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி 18.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 164 ரன்கள் அடித்திருந்தபோது மழை குறுக்கிட்டது. நீண்ட நேரமாகியும் மழை நிற்காததால் போட்டி நடுவர்கள் ஆட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்தனர். இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை வங்காளதேசம் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.






