சர்வதேச டி-20 கிரிக்கெட்டில் இருந்து வங்காளதேச வீரர் முஷ்பிகுர் ரஹீம் ஓய்வு

சர்வதேச டி-20 கிரிக்கெட்டில் இருந்து வங்காளதேச வீரர் முஷ்பிகுர் ரஹீம் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
Image Courtesy: AFP
Image Courtesy: AFP
Published on

வங்காளதேச அணியின் முன்னணி விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹீம். இவர் வங்காளதேச அணிக்காக 82 டெஸ்ட் போட்டிகள், 236 ஒருநாள் போட்டிகள் மற்றும் 102 டி-20 போட்டிகளில் ஆடி உள்ளார். மேலும், டெஸ்ட் போட்டிகளில் 5,235 ரன்னும், ஒருநாள் போட்டிகளில் 6,774 ரன்களும், டி-20 போட்டிகளில் 1,500 ரன்களும் அடித்துள்ளார்.

இந்நிலையில் 35 வயதான முஷ்பிகுர் ரஹீம் சர்வதேச டி-20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தனது 16 வயதில் வங்காளதேச அணிக்காக 2005-ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் ஆன இவர் டி-20 போட்டிகளில் 2006-ம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிராக அறிமுகம் ஆனார். 2007-ம் ஆண்டு முதல் டி-20 உலக கோப்பைகளில் வங்காளதேச அணிக்காக முஷ்பிகுர் ரஹீம் ஆடியுள்ளார்.

இந்நிலையில் அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள உலக கோப்பைக்கு அந்நாட்டு அணிக்காக ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட ரஹீம் தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். தனது ஒய்வு குறித்து முஷ்பிகுர் ரஹீம் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது,

சர்வதேச டி-20 கிரிக்கெட்டில் இருந்து நான் ஓய்வு பெறுகிறேன், டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் எனது கவனத்தை செலுத்த உள்ளேன். மேலும், ஐ.பி.எல் போன்று வெளிநாடுகளில் நடைபெறும் டி-20 கிரிக்கெட் தொடர்களில் வாய்ப்பு கிடைத்தால் விளையாடுவேன் என்று கூறியுள்ளார்.

மேலும், எம்.ஆர்.15 என்ற பெயருடன் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் எனது நாட்டுக்காக விளையாட காத்துக் கொண்டிருக்கிறேன் என பதிவிட்டுள்ளார். சமீபத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிற ஆசிய கோப்பை தொடரில் வங்காளதேச அணி ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணியிடம் தோல்வி அடைந்து லீக் சுற்றுடன் வெளியேறியதை அடுத்து முஷ்பிகுர் ரஹீம் தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com