இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர்: வங்காளதேச அணி அறிவிப்பு

வங்காளதேச டெஸ்ட் அணியின் கேப்டனாக நஜ்மூல் ஹொசைன் சாண்டோ தொடர்கிறார்.
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர்: வங்காளதேச அணி அறிவிப்பு
Published on

டாக்கா,

வங்காளதேச கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் வருகிற 17-ம் தேதியும், 2-வது டெஸ்ட் கொழும்புவில் 25-ம் தேதியும் நடைபெற உள்ளது. 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் அங்கமாக நடைபெற உள்ளதால் இந்த தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்நிலையில் இந்த தொடருக்கான வங்காளதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது. நஜ்மூல் ஹொசைன் சாண்டோ கேப்டனாக தொடருகிறார். அந்த அணியின் முஷ்பிகுர் ரஹிம், லிட்டன் தாஸ் போன்ற முன்னணி வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

வங்காளதேச அணி விவரம் பின்வருமாறு:-

நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கேப்டன்), ஷத்மான் இஸ்லாம், அனாமுல் ஹக் பிஜோய், மொமினுல் ஹக் ஷோராப், முஷ்பிகுர் ரஹீம், லிட்டன் குமர் தாஸ், மஹிதுல் இஸ்லாம் பூயான்,ஜாக்கர் அலி அனிக், மெஹிதி ஹசன் மிராஸ் (துணை கேப்டன்), தைஜுல் இஸ்லாம், நயீம் ஹசன், ஹசன் முராத், எபடோட் ஹொசைன் சவுத்ரி, ஹசன் மஹ்மூத், நஹித் ராணா, சையத் கலீத் அகமது

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com