

டாக்கா,
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வங்காளதேசம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இதில், இரு அணிகளுக்கும் இடையே கடந்த 9ம் தேதி நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவை 86 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்காளதேசம் வெற்றிபெற்றது.
இந்நிலையில், வங்காளதேசம் - ஆஸ்திரேலியா இடையேயான 2வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற உள்ளது. டாக்கா இன்று காலை 10.30 மணிக்கு ஆட்டம் தொடங்க உள்ளது.
இந்த போட்டியில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்ற வங்காளதேசமும், முதல் வெற்றியை பதிவு செய்ய ஆஸ்திரேலியாவும் முனைப்புகாட்டும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.