சென்னை அணியின் தோல்விக்கு பேட்ஸ்மேன்கள் தான் காரணம்: ஹசி

சிஎஸ்கே அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
சென்னை அணியின் தோல்விக்கு பேட்ஸ்மேன்கள் தான் காரணம்: ஹசி
Published on

கவுகாத்தி,

ஐபிஎல் 2026 தொடரின் நேற்று முன்தினம் நடந்த லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் சிஎஸ்கே அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

முதலில் பேட் செய்த சென்னை அணி 19.4 ஒவர்களில் 127 ரன்னில் சுருண்டது. இந்த இலக்கை ராஜஸ்தான் அணி 12.1 ஓவர்களி லேயே எட்டிப்பிடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற் றது.

தோல்விக்கு பிறகு சென்னை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹசி நிருபர்களிடம் கூறுகையில், 'ராஜஸ்தான் அணி எங்களை முழுமையாக தோற்கடித்து விட்டது. 'டாஸ்' வென்றது அவர்களுக்கு நல்ல விஷயம். ஆடுகளம் சில நாட்களாக மூடப்பட்டு இருந்தது. ஈரப்பதம் கார ணமாக தொடக்கத்தில் ஆடுகளத்தில் வேகப்பந்து நன்கு திரும்பியது. எங்களது பேட்ஸ்மேன்கள் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான சூழலை சமாளிக்க முடியாமல் தடுமாறி விட்டனர். வீரர்கள் மீது நம்பிக்கை'பவர்-பிளே'யில் அதிக விக்கெட்டுகளை இழக்காதவாறு தொடக்கத்தில் சற்று எச்சரிக்கையாக செயல்பட்டு இருக்கலாம். ஆனால் ஆட்டம் முடிந்த பிறகு இவ்வாறு சொல்வது எளிது. இந்த காலக்கட்டத்தில் விளையாடப் படும் கிரிக்கெட் வேறு விதமானது. வீரர்கள் ஆக்ரோஷமாகவும், தங்களது வழக்கமான ஷாட்டுகளை அடிக்கவும் விரும்புகிறார்கள். ஆனால் இன் றைய ஆட்டச்சூழல் அதற்கு உகந்ததாக இல்லை.சீதோஷ்ண நிலை நமக்கு சாதகமாக இல்லாவிட்டால், அதற்கு ஏற்ப நமது அணுகுமு றையை கொஞ்சம் மாற்றிக் கொள்ள வேண்டியது அவசியம். களத்தில் வேறு பகுதியில் ரன் எடுக்க முயற்சிக்க வேண்டும். நிச்சயம் இந்த ஆட் டத்தில் இருந்து பாடம் கற்றுக்கொள்வோம். தோல்வியை பின்னுக்கு தள் ளிவிட்டு அடுத்து சென்னையில் நடக்கும் ஆட்டத்தின் மீது கவனம் செலுத்துவோம். இந்த அணி மீது எங்களுக்கு 100 சதவீதம் நம்பிக்கை உள்ளது. அதில் எந்த சந்தேகமும் வேண்டாம்' என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com