வங்கதேச கிரிக்கெட் தொடர்; இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அறிவிப்பு...!!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வங்கதேச சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஓருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.
image courtesy;instagram/imharmanpreet_kaur
image courtesy;instagram/imharmanpreet_kaur
Published on

புதுதில்லி,

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வங்கதேச சுற்றுப்பயணத்திற்கான இந்திய மகளிர் ஒருநாள் மற்றும் டி20 அணியை அறிவித்துள்ளது.

இந்திய மகளிர் அணி வங்கதேசத்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளது. 6 போட்டிகளும் மிர்பூரில் உள்ள ஷேர்-இ-பங்களா தேசிய கிரிக்கெட் மைதானத்தில் (எஸ்பிஎன்சிஎஸ்) நடைபெறும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

ஹர்மன்ப்ரீத் கவுர் இரண்டு வடிவிலான போட்டிகளுக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார். ஸ்மிருதி மந்தனா இரண்டு வடிவிலான போட்டிகளுக்கும் துணைகேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஷிகா பாண்டே, வேகப்பந்து வீச்சாளர் ரேணுகா சிங் தாக்கூர் மற்றும் பேட்டர் ரிச்சா கோஷ் ஆகியோர் அணியில் இருந்து கழற்றி விடப்பட்டு உள்ளனர்.இதனால் இந்திய அணி அனுபவமில்லாத பந்து வீச்சாளர்களுடன் விளையாட உள்ளது.

இந்த தொடருக்காக அறிவிக்கப்பட்டு உள்ள இந்திய அணி பின்வருமாறு;

இந்திய டி20 அணி: ஹர்மன்ப்ரீத் கவுர் (சி),ஸ்மிருதி மந்தனா (விசி), தீப்தி ஷர்மா, ஷபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், யாஸ்திகா பாட்டியா , ஹர்லீன் தியோல், தேவிகா வைத்யா, உமா செத்ரி, அமன்ஜோத் கவுர், மேகனா, மேகனா பூஜா வஸ்த்ரகர், மேக்னா சிங், அஞ்சலி சர்வானி, மோனிகா பட்டேல், ராஷி கனோஜியா, அனுஷா பாரெட்டி, மின்னு மணி.

இந்திய ஒருநாள் அணி: ஹர்மன்ப்ரீத் கவுர் (சி), ஸ்மிருதி மந்தனா (விசி), தீப்தி ஷர்மா, ஷபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், யாஸ்திகா பாட்டியா , ஹர்லீன் தியோல், தேவிகா வைத்யா, உமா செத்ரி ,அமன்ஜோத் கவுர், பிரியா புனியா, பூஜா வஸ்த்ரகர், மேக்னா சிங், அஞ்சலி சர்வானி, மோனிகா பட்டேல், ராஷி கனோஜியா, அனுஷா பரெட்டி, சினே ராணா.

இவ்விரு அணிகளுக்கான முதலாவது டி20 போட்டி வரும் 9-தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com