அடுத்த ஆண்டு ஐ.பி.எல். போட்டிகள் இந்தியாவில் நடைபெறும்: கங்குலி நம்பிக்கை

2022ஆம் ஆண்டு ஐ.பி.எல் போட்டிகள் இந்தியாவில் நடைபெறும் என தான் நம்புவதாக பி.சி.சி.ஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்தார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்பானது மிகவும் அதிகமான நிலையில், ஐ.பி.எல்.போட்டியானது பாதியில் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் மீதம் இருந்த போட்டிகளை பி.சி.சி.ஐ. ஐக்கிய அரபு அமீரகத்தில் வெற்றிகரமாக நடத்தி முடித்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நான்காவது முறையாக வெற்றிவாகை சூடியது.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் சவுரவ் கங்குலி, அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐ.பி.எல். போட்டிகள் இந்தியாவில் தான் நடைபெறும் என தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில், அடுத்த ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் புதிதாக இரு அணிகள் வர உள்ளன. மேலும் இந்தியாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வரும் சூழலில், போட்டிகள் அனைத்தும் இந்திய ரசிகர்கள் மத்தியில் நடைபெறும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

ஏற்கெனவே உலகக்கோப்பை டி20 போட்டிகள் இந்தியாவில் நடைபெற இருந்த நிலையில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக போட்டிகள் அனைத்தும் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com