பி.சி.சி.ஐ. தேர்தல்கள் வருகிற அக்டோபர் 23ந்தேதி நடைபெறும்; வினோத் ராய்

அரியானா மற்றும் மகாராஷ்டிர சட்டசபை தேர்தல்களை முன்னிட்டு பி.சி.சி.ஐ. தேர்தல்கள் வருகிற அக்டோபர் 23ந்தேதி நடைபெறுகிறது.
பி.சி.சி.ஐ. தேர்தல்கள் வருகிற அக்டோபர் 23ந்தேதி நடைபெறும்; வினோத் ராய்
Published on

புதுடெல்லி,

அரியானா மற்றும் மகாராஷ்டிர சட்டசபைக்கான தேர்தல்கள் வருகிற அக்டோபர் 21ந்தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய (பி.சி.சி.ஐ.) தேர்தல் அக்டோபர் 22ந்தேதிக்கு பதிலாக அக்டோபர் 23ந்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் நிர்வாக குழு தலைவர் வினோத் ராய் செய்தியாளர்களிடம் இதுபற்றி இன்று கூறும்பொழுது, இரு மாநிலங்களிலும் அக்டோபர் 21ந்தேதிக்கு ஒரே கட்ட தேர்தல் நடத்தப்படுகிறது. அதனால், பி.சி.சி.ஐ. தேர்தல்களுக்கு ஓட்டளிக்க வரும் உறுப்பினர்களுக்கு அசவுகரியம் ஏற்படாமல் இருப்பதற்காக தேர்தலை ஒரு நாள் தள்ளி வைக்கிறோம். அதனால், அக்டோபர் 22ந்தேதிக்கு பதிலாக அக்டோபர் 23ந்தேதிக்கு பி.சி.சி.ஐ. தேர்தல்கள் நடைபெறும். இதுதவிர்த்து வேறு ஏதேனும் செய்திகள் வெளிவந்து இருப்பின் அவை தவறானவை ஆகும் என்று அவர் கூறியுள்ளார்.

நிர்வாக குழுவின் மற்றொரு உறுப்பினரான டையானா எடுல்ஜி கூறும்பொழுது, பி.சி.சி.ஐ. தேர்தல்கள் சரியான நேரத்தில் நடத்தப்பட வேண்டும். ஆனால், சட்டசபை தேர்தலால் ஒரு நாள் அவற்றை தள்ளி வைக்கலாம் என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com