

மும்பை,
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து வந்த அனில் கும்பிளேவின் பதவிக்காலம் முடிவுக்கு வந்தது. அனில் கும்பிளே மீண்டும் பயிற்சியாளராக தொடர விரும்பாததால், புதிய பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரவிசாஸ்திரி தலைமை பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டார். அவரது நியமனத்தை கிரிக்கெட் நிர்வாகக் கமிட்டியும் ஏற்றுக்கொண்டுள்ளது.
அதேபோல், பந்து வீச்சு பயிற்சியாளராக ஜாகீர் கானும், வெளிநாட்டு தொடருக்கான ஆலோசகராக ராகுல் டிராவிட்டும் நியமிக்கப்பட்டதாக ஒரு தகவல் வெளியானது.
ஆனால், ரவி சாஸ்திரியுடன் கலந்து ஆலோசித்த பிறகு, மற்ற பயிற்சியாளர்கள் நியமனம் குறித்து அறிவிப்பதாக நிர்வாக கமிட்டி அறிவித்தது. இந்த நிலையில், பந்து வீச்சு பயிற்சியாளராக பரத் அருண் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பந்து வீச்சு உதவி பயிற்சியாளராக சஞ்செய் பாங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். இருவரும் அடுத்த உலக கோப்பை தொடர் வரை பதவியில் இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.