பிசிசிஐ தலைவர் கங்குலி நாளை டிஸ்சார்ஜ்: மருத்துவமனை நிர்வாகம் தகவல்

பிசிசிஐ தலைவர் கங்குலி மருத்துவமனையில் இருந்து நாளை டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளார்.
பிசிசிஐ தலைவர் கங்குலி நாளை டிஸ்சார்ஜ்: மருத்துவமனை நிர்வாகம் தகவல்
Published on

கொல்கத்தா,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவருமான சவுரங் கங்குலிக்கு திடீரென நெஞ்சு வலியுடன் தலைசுற்றுதல் மற்றும் வாந்தி ஏற்பட்டு கொல்கத்தாவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் கடந்த 2 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.

லேசான மாரடைப்பால் பாதிக்கப்பட்ட அவரது இதயத்துக்கு செல்லும் ரத்தக்குழாயில் மூன்று அடைப்புகளில் ஒன்று ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை மூலம் நீக்கப்பட்டது. அவரது உடல் நிலை குறித்து டாக்டர்கள் குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கங்குலி நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று உட்லேண்ட்ஸ் மருத்துவமனை அறிவித்துள்ளது. வீட்டில் வைத்தும் கங்குலியின் உடல் நிலை தினசரி கண்காணிக்கப்படும் என்று மருத்துவமனை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com