சேத்தன் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு நீக்கம்- பிசிசிஐ அதிரடி உத்தரவு

உலகக் கோப்பை தோல்வி எதிரொலியை தொடர்ந்து சேத்தன் சர்மா தலைமையிலான தேர்வு குழு நீக்கப்பட்டுள்ளனர்.
சேத்தன் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு நீக்கம்- பிசிசிஐ அதிரடி உத்தரவு
Published on

மும்பை,

நடந்து முடிந்த 8-வது உலகக் கோப்பை தொடரில் அரையிறுதி போட்டியில் இந்திய அணி இங்கிலாந்திடம் படுதோல்வி அடைந்து வெளியேறியது. இதனால் இந்திய அணியில் வீரர்கள் தேர்வு குறித்து பல விமர்சனங்கள் எழுந்தது. இந்திய அணியில் இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் உலகக் கோப்பை தோல்வி எதிரொலியை தொடர்ந்து சேத்தன் சர்மா தலைமையிலான இந்திய அணியின் தேர்வு குழுவில் உள்ள அனைவரையும் நீக்கம் செய்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அதிரடி உத்தரவிட்டுள்ளது. ஹர்விந்தர் சிங், சுனில் ஜோஷி மற்றும் தேபாசிஷ் மொகந்தி ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

அதே நேரத்தில் தேர்வு குழுவில், தலைவர் உள்ளிட்ட 5 பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. பிசிசிஐயின் இந்த அதிரடி உத்தரவு கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com