ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடர்: இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு எப்போது..?

இந்திய கிரிக்கெட் டெஸ்ட் அணியில் மாற்றம் இருக்க வாய்ப்பில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடர்: இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு எப்போது..?
Published on

புதுடெல்லி,

ஐ.பி.எல். போட்டி முடிந்ததும், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியா வந்து ஒரே ஒரு டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது.

இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நியூசண்டிகாரில் அடுத்த மாதம் (ஜூன்) 6-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை நடக்கிறது. ஒருநாள் போட்டிகள் முறையே தர்மசாலாவில் ஜூன் 14-ந் தேதியும், லக்னோவில் 17-ந் தேதியும், சென்னையில் 20-ந் தேதியும் நடக்கிறது.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியை நாளை மறுநாள் (19-ந் தேதி) அறிவிக்கப்படுகிறது. பணிச்சுமையை கருத்தில் கொண்டு வேகப்பந்து வீச்சாளர ஜஸ்பிரித் பும்ராவுக்கு டெஸ்ட் அல்லது ஒருநாள் போட்டி தொடரில் ஓய்வு அளிக்கப்படும் என்று தெரிகிறது. ஒருநாள் போட்டியில் டெல்லி வேகப்பந்து வீச்சாளர் பிரின்ஸ் யாதவ் இடம் பெற வாய்ப்புள்ளது. டெஸ்ட் அணியில் மாற்றம் இருக்க வாய்ப்பில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

X

Daily Thanthi
www.dailythanthi.com