

இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு முன்னதாக ஆஸ்திரேலிய அணிக்கு காயம் காரணமாக பின்னடைவு ஏற்பட்டுள்ளது. வேகப்பந்து வீச்சாளர்களான மஹ்லி பியர்ட்மேன் மற்றும் சேவியர் பார்ட்லெட் ஆகியோர் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ளனர். பியர்ட்மேனுக்கு இடது தொடைப்பகுதியில் தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளது. பார்ட்லெட்டுக்கு இடது முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே பக்கவாட்டுப் பகுதியில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக நாதன் எல்லிஸும் தொடரில் இருந்து விலகியுள்ள நிலையில், தற்போது மேலும் இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் விலகியிருப்பது ஆஸ்திரேலிய அணிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.
பியர்ட்மேன் வரவிருக்கும் பிக் பாஷ் லீக் தொடரில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பார்ட்லெட்டின் காயம் குறித்து தொடர்ந்து மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்கிடையே, பேட் கம்மின்ஸ் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோரும் அடுத்த மாதம் நடைபெற உள்ள நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான தயாரிப்பில் இருப்பதால் இந்த டி20 தொடரில் பங்கேற்கவில்லை.