சீண்டிய பென் டக்கெட்.. தரமான பதிலடி கொடுத்த பண்ட்

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் பண்ட் அரைசதம் கடந்த நிலையில் களத்தில் உள்ளார்.
image courtesy:BCCI
image courtesy:BCCI
Published on

லண்டன்,

இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரின் 3-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்சில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 112.3 ஓவர்களில் 387 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக ஜோ ரூட் 104 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணி 2-வது நாள் ஆட்டநேர முடிவில் 43 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 145 ரன்கள் அடித்திருந்தது. லோகேஷ் ராகுல் 53 ரன்களுடனும், ரிஷப் பண்ட் 19 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இத்தகைய சூழலில் 3-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இங்கிலாந்து பந்துவீச்சை கவனமாக சமாளித்து வரும் பண்ட் - ராகுல் ஜோடி விக்கெட் விழாமல் விளையாடி வருகிறது. சிறப்பாக விளையாடிய பண்ட் தனது ஸ்டைலில் சிக்சர் அடித்து அரைசதத்தை எட்டினார். மறுபுறம் கே.எல். ராகுல் சதத்தை நோக்கி வெகுவாக முன்னேறியுள்ளார்.

இதனிடையே இந்திய அணி நிதானமாக ஆடி வருவதை கிண்டலடிக்கும் நோக்கில் இங்கிலாந்து வீரர் பென் டக்கெட், ரிஷப் பண்டை நோக்கி, 'நீங்கள் டிராவுக்காக பேட்டிங் செய்கிறீர்களா?' என்று கேட்டார்.

அதற்கு தரமான பதிலடி கொடுத்த பண்ட், 'உங்களைப் போலவே' என்று சொன்னார். அதாவது இங்கிலாந்து அணியும் இந்த போட்டியில் நிதானமாக ஆடியதை சுட்டிக்காட்டி பண்ட் பதிலடி கொடுத்தார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com