

புதுடெல்லி,
10 அணிகள் பங்கேற்கும் 19-வது ஐ.பி.எல். தொடர் 28-ந்தேதி முதல் மே 31-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது.
இந்த நிலையில், டெல்லி அணி வீரர் பென் டக்கெட் ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இங்கிலாந்து அணிக்காக விளையாட உள்ளதால் அவர் விலகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.இங்கிலாந்து அணி வீரர் பென் டக்கெட்டை டெல்லி அணி ரூ.2 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.
இந்த நிலையில், பென் டக்கெட் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளிருந்து விலகியுள்ளதால் அவருக்கு அடுத்த 2 ஆண்டுகள் ஐபிஎல் தொடரில் விளையாட முடியாது.
ஐபிஎல் ஏலத்தில் வாங்கப்பட்ட ஒருவர் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகினால், அடுத்த இரு ஆண்டுகளுக்கு ஐபிஎல் தொடரில் விளையாட சம்பந்தப்பட்ட வீரருக்கு தடை விதிக்கப்படும் என்பது விதி. அதன்படி, பென் டக்கெட் அடுத்த இரு ஐபிஎல் தொடரில் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இங்கிலாந்து அணியின் ஹாரி புரூக் இதுபோல் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகினார். அவருக்கும் 2 ஆண்டுகள் விளையாட தடை விதிக்கப்பட்டது.