இங்கிலாந்து அணிக்கு முக்கியத்துவம்....ஐபிஎல் தொடரிலிருந்து பென் டக்கெட் விலகல்

இங்கிலாந்து அணிக்காக விளையாட உள்ளதால் அவர் விலகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு முக்கியத்துவம்....ஐபிஎல் தொடரிலிருந்து பென் டக்கெட் விலகல்
Published on

புதுடெல்லி,

10 அணிகள் பங்கேற்கும் 19-வது ஐ.பி.எல். தொடர் 28-ந்தேதி முதல் மே 31-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதையொட்டி, 10 அணி வீரர்களும், பயிற்சியை தொடங்கிவிட்டனர்.

இந்த நிலையில், டெல்லி அணி வீரர் பென் டக்கெட் ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இங்கிலாந்து அணிக்காக விளையாட உள்ளதால் அவர் விலகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பென் டக்கெட் கூறியதாவது,

சிறுவயதிலிருந்தே இங்கிலாந்துக்காக விளையாடுவது என் கனவாக இருந்து வருகிறது, மேலும் இங்கிலாந்து கிரிக்கெட்டிற்கு என்னால் முடிந்த அனைத்தையும் கொடுக்க விரும்புகிறேன். அதைச் செய்வதற்கு, கோடைக்காலத்திற்கு முன்னதாக நான் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சிறந்த நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். டெல்லியில் உள்ள அனைவரிடமும் நான் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். எனது இந்த முடிவு ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு இடையூறுக்கும் வருந்துகிறேன். என தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணி வீரர் பென் டக்கெட்டை டெல்லி அணி ரூ.2 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com