

லண்டன்,
லண்டன் லார்ட்சில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து 115 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வெற்றியை கொண்டாட அங்குள்ள இரவு விடுதிக்கு சென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்சும், வேகப்பந்து வீச்சா ளர் அட்கின்சனும் சர்ச்சையில் சிக்கினர். விடுதியில் உள்ளூர் ரக்பி வீரர் ஒருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சண்டையிட்டது அம்பலமானது. அணி வீரர்களுக்கான கட்டுப்பாட்டை மீறி அவர்கள் விடுதிக்கு சென்றதை அறிந்த இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தை கடும் கோபத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது. இந்த விவகாரம் குறித்து கிரிக்கெட் வாரியம் தீவிர விசாரணை மேற்கொண்டது.
இந்த நிலையில் லண்டன் ஓவலில் வருகிற 17-ந்தேதி தொடங்கும் நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் ஆடும் இங்கிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. கேப்டன் பென் ஸ்டோக்ஸ், அட்கின்சன் அதிரடியாக நீக்கப்பட்டனர். பொறுப்பு கேப்டனாக ஜோ ரூட் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜோப்ரா ஆர்ச்சர், ஜோர்டன் காக்ஸ் அணியில் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர்.