சக வீரர்களிடம் மன்னிப்பு கேட்ட பென் ஸ்டோக்ஸ் - காரணம் என்ன.?

நியூசிலாந்து அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.
சக வீரர்களிடம் மன்னிப்பு கேட்ட பென் ஸ்டோக்ஸ் - காரணம் என்ன.?
Published on

ட்ரெண்ட் பிரிட்ஜ்,

தனது அணி வீரர்களிடம் மன்னிப்பு கேட்பதாக பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து - நியூசிலாந்து டெஸ்ட்

நியூசிலாந்து அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதற்கிடையே, இரவு விடுதியில் ஏற்பட்ட தகராறு காரணமாக 2-வது டெஸ்ட் போட்டியில் விளையாட இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் வேகப்பந்துவீச்சாளர் அட்கின்சர் ஆகியோருக்கு தடை விதிக்கப்பட்டது. தடை முடிந்து இருவரும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளனர்.

இந்த நிலையில், தனது அணி வீரர்களிடம் மன்னிப்பு கேட்பதாக பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார். டிரெண்ட் பிரிட்ஜில் கடைசி டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்கள் சந்திப்பின்போது பென் ஸ்டோக்ஸ் பேசியதாவது;

பென் ஸ்டோக்ஸ்

"ஒரு கேப்டனாக நான் செய்ய வேண்டிய முதல் வேலை வீரர்களிடம் மன்னிப்பு கேட்பது தான். எனது இந்த செயல் என்னைத் தாண்டி ஜோ ரூட், அறிமுக வீரர்கள் மற்றும் ஒட்டுமொத்த அணியையும் பாதித்துள்ளது. ஒரு கேப்டனாக இந்த தவறுக்கு நான் முழுப் பொறுப்பேற்க வேண்டும். என்னுடைய முழு கவனமும் தற்போது டிரெண்ட் பிரிட்ஜ் டெஸ்ட் போட்டியின் மீது தான் உள்ளது. நானும் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லமும் இங்கிலாந்து அணியின் பொறுப்பை ஏற்ற பிறகு, நாங்கள் சந்திக்கும் மிகக் கடுமையான அழுத்தம் இதுவாகும். ஆனால், ஒரு சிறந்த தலைவராக இதிலிருந்து மீண்டு வருவதே முக்கியம்."

இவ்வாறு அவர் கூறினார்.

இரண்டு போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், 1-1 என தொடர் சமநிலையில் உள்ளது. 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com