கொல்கத்தாவுக்கு எதிராக பெங்களூரு பந்துவீச்சு தேர்வு

டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் படிதார் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
கொல்கத்தாவுக்கு எதிராக பெங்களூரு பந்துவீச்சு தேர்வு
Published on

ராய்ப்பூர்,

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியா வின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் தங்கள் பிரி வில் உள்ள அணிகளுடன் ஒரு முறை, எதிர்பிரி வில் அங்கம் வகிக்கும் அணிகளுடன் தலா 2 முறை என மொத்தம் 14 ஆட்டங்களில் விளை யாட வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற் றுக்கு முன்னேறும்.

இந்த போட்டி தொடரில் சத்தீஷ்கார் மாநிலம் ராய்ப்பூரில் இன்று நடைபெறும் 57-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, 3 முறை சாம் பியனான கொல்கத்தா நைட் ரைடர்சை எதிர்கொள்கிறது.

இந்த நிலையில், இந்த போட்டிக்கான டாஸ் போடுவதில் தாமதம் ஏற்ப்பட்டுள்ளது. மழை பெய்ததால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது.

மழை நின்ற பின் டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் படிதார் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com