

பெங்களூரு,
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் இரவு ஆமதா பாத்தில் நடந்த இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் நிர்ணயித்த 156 ரன் இலக்கை பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் (ஆர்.சி.பி.) அணி 18 ஓவர்களில் எட்டிப்பிடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மீண்டும் சாம்பியன் பட்டம் வென்றது. விராட் கோலி 75 ரன்கள் (42 பந்து, 9 பவுண் டரி, 3 சிக்சர்) எடுத்து ஆட்டநாயகனாக ஜொலித்தார்.
தொடர்ந்து 2-வது முறையாக கோப்பையை உச்சிமுகர்ந்த பெங்களூரு அணிக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், பெங்களூரு அணி இன்ஸ்டாகிராமில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. அதன்படி பெங்களூரு அணி 25 மில்லியன்(2.5 கோடி) பாலோயர்களை பெற்றுள்ளது.அதன்படி இன்ஸ்டாகிராமில் அதிகம் பின்தொடர்பவர்களை பெற்ற ஐபிஎல் அணியாக பெங்களூரு அணி உள்ளது.
சென்னை அணி 23.7 மில்லியன் பாலோயர்களை கொண்டு 2வது இடத்தில் உள்ளது.