

பெங்களூரு,
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றிரவு ஆமதாபாத்தில் நடந்த 42-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, முன்னாள் சாம்பியன் குஜராத் டைட்டன்சுடன் மோதியது. டாஸ் ஜெயித்த குஜராத் கேப்டன் சுப்மன் கில் முதலில் பந்து வீசுவதாக அறி வித்தார்.இதையடுத்து பேட்டிங்கை தொடங்கியபெங்களூரு அணி 19.2 ஓவர்களில் 155 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.
அடுத்து 156 ரன் இலக்கை நோக்கி குஜராத் அணி 15.5 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 158 ரன்கள் சேர்த்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெங்களூரு தரப்பில் புவனேஷ்வர்குமார் 3 விக்கெட்டும், ஷெப்பர்டு 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
இந்த நிலையில் இந்த போட்டியில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தியதால் புவனேஷ்வர் குமார் புதிய சாதனை படைத்துள்ளார்.
டி20 கிரிக்கெட் வரலாற்றில் 350 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை புவனேஷ்வர் குமார் படைத்துள்ளார்.