இந்தியா திரும்பினார் பெங்களூரு வீரர் பில் சால்ட்


இந்தியா திரும்பினார் பெங்களூரு வீரர் பில் சால்ட்
x
தினத்தந்தி 3 Jun 2025 3:37 PM IST (Updated: 3 Jun 2025 4:06 PM IST)
t-max-icont-min-icon

இறுதிப்போட்டியில் பெங்களூரு - பஞ்சாப் அணிகள் மல்லுக்கட்டுகின்றன.

அகமதாபாத்,

18-வது ஐ.பி.எல். தொடர் கடந்த மார்ச் 22-ந் தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் 'பிளே-ஆப்' சுற்றுகளின் முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.இந்த நிலையில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மல்லுக்கட்டுகின்றன.

இந்த நிலையில் ,ஐபிஎல் இறுதிப்போட்டியில் பங்கேற்பதற்காக இன்று காலை பெங்களூரு அணி வீரர் பில் சால்ட் அகமதாபாத் வந்தடைந்தார்.

தன்னுடைய குழந்தை பிறப்புக்காக தாய்நாடான இங்கிலாந்துக்கு சென்றிருந்த சால்ட் இறுதிப்போட்டியில் பங்கேற்பதில் சந்தேகம் என தகவல் வெளியாகி இருந்தது. பில் சால்ட் வருகை பெங்களுரு அணிக்கு பலமாக அமைந்துள்ளது.

1 More update

Next Story