பெங்களூரு அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

லக்னோ தரப்பில் ப்ரின்ஸ் யாதவ் 3 விக்கெட்டுகளையும், ஆவேஷ் கான் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
பெங்களூரு அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
Published on

பெங்களூரு,

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. போட்டியில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் ஒரு முறை, எதிர்பிரிவில் அங்கம் வகிக்கும் அணிகளுடன் 2 முறை என மொத்தம் 14 ஆட்டங்களில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும்.இந்த தொடரில் பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்ற 23-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம் பியன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெயன்ட்சை எதிர்கொண்டது.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் படிதார். பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்தது. லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 146 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பெங்களூரு அணியில் ரசிக் சலாம் 4 விக்கெட் , புவனேஷ்வர் குமார் 3 விக்கெட் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து 147 ரன்களை துரத்திய ஆர்.சி.பி. அணிக்கு பில் சால்ட் 7 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். மற்றொரு துவக்க வீரரான விராட் கோலி சிறப்பாக ஆடி 34 பந்துகளில் 49 ரன்களை குவித்தார்.. இவர் தவிர கேப்டன் ரஜத் பட்டிதார் 27 ரன்கள், ஜிதேஷ் சர்மா 23 ரன்களை சேர்த்தனர்.

போட்டி முடிவில் ஆர்.சி.பி. அணி 5 விக்கெட் இழப்புக்கு 149 ரன்களை குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆர்.சி.பி. தரப்பில் டிம் டேவிட் மற்றும் ரெமாரியோ ஷெப்பர்ட் தலா 14 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். லக்னோ தரப்பில் ப்ரின்ஸ் யாதவ் 3 விக்கெட்டுகளையும், ஆவேஷ் கான் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com