21 வயதில் இங்கிலாந்து அணியின் கேப்டன்.. 136 ஆண்டுகால சாதனையை முறியடித்த பெத்தேல்


21 வயதில் இங்கிலாந்து அணியின் கேப்டன்.. 136 ஆண்டுகால சாதனையை முறியடித்த பெத்தேல்
x

அயர்லாந்து டி20 தொடருக்கான இங்கிலாந்து அணியின் கேப்டனாக ஜேக்கப் பெத்தேல் நியமிக்கப்பட்டுள்ளார்.

லண்டன்,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதல் டி20 போட்டி செப்டம்பர் 17-ம் தேதி நடைபெற உள்ளது. 2 மற்றும் 3-வது போட்டிகள் முறையே செப்.19 மற்றும் 21-ம் தேதிகளில் நடைபெற உள்ளன.

இந்நிலையில் இந்த தொடருக்கான இங்கிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இங்கிலாந்து டி20 அணியின் வழக்கமான கேப்டனான ஹாரி புரூக்கிற்கு இந்த தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக புதிய கேப்டனாக ஆல்-ரவுண்டர் ஜேக்கப் பெத்தேல் (வயது 21) நியமிக்கப்பட்டார்.

இதன் மூலம் இங்கிலாந்து ஆண்கள் கிரிக்கெட் வரலாற்றில் இளம் கேப்டன் சாதனையை ஜேக்கப் பெத்தேல் படைத்தார். இதற்கு முன்பு மான்டி பவ்டன் 1889-ம் ஆண்டு தன்னுடைய 23 வயதில் இங்கிலாந்து அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டதே சாதனையாக இருந்தது. அவரது 136 ஆண்டு கால சாதனையை பெத்தேல் முறியடித்துள்ளார்.

அயர்லாந்து டி20 தொடருக்கான இங்கிலாந்து அணி விவரம் பின்வருமாறு:-

ஜேக்கப் பெத்தேல் (கேப்டன்), ரெஹான் அகமது, சோனி பேக்கர், டாம் பான்டன், ஜோஸ் பட்லர், லியாம் டாசன், டாம் ஹார்ட்லி, வில் ஜாக்ஸ், சாகிப் மஹ்மூத், ஜேமி ஓவர்டன், மேத்யூ பாட்ஸ், அடில் ரஷீத், பில் சால்ட், லூக் வுட்.

1 More update

Next Story