மார்ச் மாதத்திற்கான சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரராக புவனேஷ்குமார் தேர்வு

மார்ச் மாதத்திற்கான சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரராக புவனேஷ்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மார்ச் மாதத்திற்கான சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரராக புவனேஷ்குமார் தேர்வு
Published on

துபாய்,

கிரிக்கெட் போட்டியில் அபரமாக ஆடும் வீரர்களை மாதம் தோறும் கவுரவிக்கும் வகையில் மாதத்திற்கான சிறந்த வீரரை தேர்வு செய்து ஐசிசி அண்மைக்காலமாக அறிவித்து வருகிறது.

அந்த வகையில் கடந்த மார்ச் மாதத்திற்கான சிறந்த வீரர் யார் என்பதை அடையாளம் காண்பதற்கான வீரர்களின் பெயரை ஐசிசி பரிந்துரைத்து இருந்தது. இந்த பரிந்துரையில் ஆடவர் கிரிக்கெட்டில் சிறப்பான பங்களிப்பை கொடுத்த இந்தியாவின் பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் பெயரும் இடம் பெற்றிருந்தது.

ஆப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான் மற்றும் ஜிம்பாப்வே அணியின் ஸீன் வில்லியம்ஸும் இடம் பிடித்து இருந்தனர். இந்த நிலையில், மார்ச் மாதத்திற்கான சிறந்த வீரராக புவனேஷ்குமாரை ஐசிசி அறிவித்துள்ளது.

சிறந்த வீரர் அறிவிப்பது எப்படி?

மாதத்தின் சிறந்த வீரா/வீராங்கனை என்கிற பெயரில் புதிய விருதை இந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்தது ஐசிசி. சாவதேச கிரிக்கெட்டில் அனைத்து வகை போட்டிகளிலும் சிறப்பாகச் செயல்படும் வீரா, வீராங்கனைகளை ஆண்டு முழுவதுமாக அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்படவுள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது. தங்களுக்கு விருப்பமான வீரா, வீராங்கனைகளுக்கு அந்த விருது கிடைக்கச் செய்யும் வகையில் ரசிகாகள் ஆன்லைன் மூலமாக வாக்குகளை செலுத்தலாம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com