

ஆஸ்திரேலியா,
ஆஸ்திரேலியாவின் மிக பிரபலமான 20 ஓவர் தொடர் பிக்பாஷ் லீக். இந்த ஆண்டுக்கான ஆண்கள் பிக்பாஷ் லீக் கடந்த 5 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் மெல்போர்ன் ரெனேகட்ஸ், மெல்போர்ன் ஸ்டார்ஸ் ,பிரிஸ்மென் ஹீட்,கோபர்ட் ஹூரிகேன்ஸ், பெர்த் ஸ்கார்சேர்ஸ் ,சிட்னி தண்டர்ஸ் , அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ், சிட்னி சிக்சர்ஸ் என மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ளன.
இந்த தொடரின் 4-வது போட்டி இன்று மதியம் 1.05 மணிக்கு தொடங்குகிறது. மாத்திவ் வேட் தலைமையிலான கோபர்ட் ஹூரிகேன்ஸ் அணியும் ஹென்றிகியூஸ் தலைமையிலான சிட்னி சிக்சர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
அதன் பிறகு மாலை 4 மணிக்கு தொடங்கும் மற்றொரு போட்டியில் பெர்த் ஸ்கார்சேர்ஸ் மற்றும் பிரிஸ்மென் ஹீட் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்த தொடரில் நேற்று நடந்த 3வது போட்டியில் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணியை 2 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணி.