பிக் பாஷ் லீக்: ஜோஷ் பிலிப் அதிரடி... பிரிஸ்பேன் ஹீட்டை வீழ்த்திய சிட்னி சிக்சர்ஸ்

சிட்னி சிக்சர்ஸ் தரப்பில் அதிகபட்சமாக ஜோஷ் பிலிப் 66 ரன்கள் எடுத்தார்.
Image Courtesy: @BBL / @SixersBBL
Image Courtesy: @BBL / @SixersBBL
Published on

பிரிஸ்பேன்,

இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல் தொடர் போல ஆஸ்திரேலியாவில் பிக் பாஷ் லீக் கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. பிக் பாஷ் லீக் தொடரின் 14வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பிரிஸ்பேனில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சிட்னி சிக்சர்ஸ் - பிரிஸ்பேன் ஹீட் அணிகள் ஆடின.

இதில் டாஸ் வென்ற சிட்னி சிக்சர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த பிரிஸ்பேன் ஹீட் 20 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 138 ரன்கள் மட்டுமே எடுத்தது. பிரிஸ்பேன் ஹீட் தரப்பில் அதிகபட்சமாக மெக்ஸ்வீனி 34 ரன்கள் எடுத்தார். சிட்னி சிக்சர்ஸ் தரப்பில் பென் துவர்ஷுயிஸ் 4 விக்கெட் வீழ்த்தினார்.

தொடர்ந்து 139 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய சிட்னி சிக்சர்ஸ் அணி 16.1 ஓவர்களில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து 142 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சிட்னி சிக்சர்ஸ் தரப்பில் அதிரடியாக ஆடிய ஜோஷ் பிலிப் 66 ரன்கள் எடுத்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com