பிக்பாஷ் டி20 லீக்: மெல்போர்ன் அணியை வீழ்த்தி பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் வெற்றி


பிக்பாஷ் டி20 லீக்: மெல்போர்ன் அணியை வீழ்த்தி பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் வெற்றி
x

பெர்த் அணியில் பின் ஆலன் சிறப்பாக விளையாடினார்

மெல்போர்ன்,

ஆஸ்திரேலியாவில் பிக் பாஷ் டி20 லீக் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் - மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகள் மோதின.இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது.அதில் டாஸ் வென்ற பெர்த் அணியின் கேப்டன் மார்கஸ் ஸ்டாய்னிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, மெல்போர்ன் அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்கம் முதல் மெல்போர்ன் அணி வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறினர்.

மெல்போர்ன் அணியில் மார்கஸ் ஸ்டாய்னிஸ் மட்டும் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தார். பந்தங்களை நாலாபுறமும் சிதறடித்த அவர் 55 ரன்கள் எடுத்தார்.இதனால் மெல்போர்ன் அணி 18.2 ஓவர்களில் 130 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பெர்த் அணியில் ஜெ ரிச்சர்ட்சன் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

தொடர்ந்து விளையாடிய பெர்த் அணியில் பின் ஆலன் சிறப்பாக விளையாடினார். மெல்போர்ன் அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்த அவர் அரைசதமடித்தார். ஆரோன் ஹார்டியும் பொறுப்புடன் விளையாடி 41 ரன்கள் எடுத்தார்.

இதனால் 16.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்து பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

1 More update

Next Story