கிரிக்கெட் சூதாட்டத் தரகர் சஞ்சீவ் சாவ்லா இந்தியா கொண்டு வரப்பட்டார்

கிரிக்கெட் சூதாட்ட புகாரில் சிக்கிய தரகர் சஞ்சீவ் சாவ்லா இந்தியா கொண்டு வரப்பட்டார்
கிரிக்கெட் சூதாட்டத் தரகர் சஞ்சீவ் சாவ்லா இந்தியா கொண்டு வரப்பட்டார்
Published on

புதுடெல்லி

2000 ஆம் ஆண்டில் ஹன்சே குரோஞ்ச் தலைமையிலான தென்னாப்பிரிக்க அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிய போது சூதாட்டம் நடந்ததாக புகார் எழுந்தது.இதில் சூதாட்டத் தரகராக செயல்பட்டதாக டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் சஞ்சீவ் சாவ்லா மீது குற்றம் சாட்டப்பட்டது.

இதை தொடர்ந்து சஞ்சீவ் சாவ்லா, லண்டன் தப்பிச் சென்றார்.அந்நாட்டு குடிமகன் ஆனார். அவரை நாடு கடத்தும்படி, இங்கிலாந்து அரசுக்கு 2016ம் ஆண்டில் இந்திய அரசு தரப்பில் கேரிக்கை விடுக்கப்பட்டது.

இதுதெடர்பான வழக்கை கடந்த மாதம் 23ம் தேதி விசாரித்த இங்கிலாந்து நீதிமன்றம், சாவ்லாவை 28 நாட்களுக்குள் இந்தியாவுக்கு நாடு கடத்த உத்தரவிட்டிருந்தது. அதனடிப்படையில்,இங்கிலாந்தால் அவர் நாடு கடத்தப்பட்டார். அவரை லண்டனில் இருந்து டெல்லிக்கு பலத்த பாதுகாப்புடன் பேலீஸார் இன்று காலை அழைத்து வந்தனர்.

அவர் மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு இங்கிலாந்து நீதிமன்றங்களுக்கு இந்திய அரசு அளித்த உத்தரவாதப்படி திகார் சிறையில் காவலில் வைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com