பார்டர்-கவாஸ்கர் டிராபி; இந்திய அணியுடன் இணைந்த ரோகித் சர்மா


பார்டர்-கவாஸ்கர் டிராபி; இந்திய அணியுடன் இணைந்த ரோகித் சர்மா
x

Image Courtesy: X (Twitter) / @mufaddal_vohra

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது போட்டியில் ரோகித் சர்மா களம் இறங்குவார் என தெரிகிறது.

பெர்த்,

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர்-கவாஸ்கர் டிராபி) ஆடி வருகிறது. இதில் முதல் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெறும் நிலையில் உள்ளது. இந்த போட்டியில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா கலந்து கொள்ளவில்லை.

ரோகித் சர்மாவின் மனைவி ரித்திகாவுக்கு கடந்த 15-ந் தேதி ஆண் குழந்தை பிறந்ததால் அவர் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு சென்ற இந்திய அணியினருடன் செல்லவில்லை. இதன் காரணமாக அவர் பெர்த் டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை.

இந்நிலையில், ரோகித் சர்மா பார்டர்-கவாஸ்கர் தொடரில் பங்கேற்க தற்போது ஆஸ்திரேலியா சென்றுள்ளார். அவர் பெர்த்தில் இந்திய அணியினருடன் தற்போது இணைந்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது போட்டியில் அவர் களம் இறங்குவார் என தெரிகிறது.


1 More update

Next Story