

அடிலெய்டு,
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றது. இதில் தொடக்க ஆட்டத்தில் இந்தியா 21 ரன் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 19 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தது.
இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி அடிலெய்டில் நேற்று நடந்தது. முதலில் பேட்டிங் செய்த
இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் மந்தனா அதிகபட்சமாக 82 ரன்களும், ஜெமிமா 59 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலிய தரப்பில் அனபெல் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையடுத்து 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 159 ரன்களே எடுக்க முடிந்தது.இதன் மூலம் 17 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. அத்துடன், 3 போட்டிகள் கொண்ட தொடரை 1-2 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
இந்த வெற்றி தொடர்பாக பேசிய இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் கூறியதாவது,
அணியின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி இதுவாகும். எங்கள் அணியில் அனைவரும் நேர்மறையான எண்ணத்துடன் வெற்றிக்காக செயல்பட்டனர். ஸ்மிர்தி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ் மிகப்பெரிய பங்களிப்பை அளித்தனர். எங்களது பந்து வீச்சு திட்டம் மிகவும் எளிமையா னது. விக்கெட்டுகளை வீழ்த்துவதே எங்கள் நோக்கமாகும். எங்களது பந்து வீச்சாளர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டனர்' என்றார்.
ஆஸ்திரே லிய அணியின் கேப்டன் சோபி மோலினக்ஸ் கருத்து தெரிவிக்கையில் 'இது நல்ல விக்கெட். நாங்கள் தவறான நேரத்தில் சில முக்கியமான விக் கெட்டுகளை இழந்தது தோல்விக்கு வழிவகுத்தது' என்றார்.