பாக்சிங் டே டெஸ்ட்: ஆஸ்திரேலியா பேட்டிங்


பாக்சிங் டே டெஸ்ட்: ஆஸ்திரேலியா பேட்டிங்
x

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பந்துவீச்சை தேர்வுசெய்தது.

மெல்போர்ன்,

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் பெர்த், பிரிஸ்பேன், அடிலெய்டில் நடந்த முதல் 3 டெஸ்டிலும் ஆஸ்திரேலியா வரிசையாக வெற்றி பெற்று தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி கோப்பையை தக்கவைத்தது.

இந்த நிலையில் ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி உலகின் மிகப்பெரிய மைதானங்களில் ஒன்றான மெல்போர்னில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் பேட் கம்மின்ஸ் பணிச்சுமை காரணமாக எஞ்சிய தொடரில் இருந்து விலகி விட்டார். இதனால் ஸ்டீவன் சுமித் அணியை வழிநடத்துகிறார்.

இந்த போட்டிக்காக டாஸ் போடப்பட்டது. அப்போது டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி, ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. ஆஸ்திரேலிய அணி தற்போது வரை 19 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 51 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

‘பாக்சிங் டே’ டெஸ்ட்

ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளில் கிறிஸ்துமஸ் பண்டிகை தினத்தில் (டிச. 25) கிறிஸ்துவ தேவாலயங்களில் 'பாக்ஸ்' (பெட்டி) ஒன்று வைக்கப்படும். இங்கு வருபவர்கள் பணம் மற்றும் பரிசுப்பொருட்களை இந்த பெட்டியில் நன்கொடையாக அளித்துச் செல்வர். இந்த 'பாக்சை' கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள், இன்று (டிச. 26) திறப்பர். பணம், பரிசுப் பொருட்களை ஏழை மக்களுக்கு வழங்குவர். இந்த தினத்திற்கு 'பாக்சிங் டே' என்று பெயர்.

டிச. 26ல் விடுமுறை என்பதால் ஒவ்வொரு ஆண்டும் மெல்போர்னில் டெஸ்ட் போட்டி துவங்கும். இதற்கு 'பாக்சிங் டே' டெஸ்ட் என்று பெயர். கடந்த 1950 முதன் முறையாக ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதின. 1980ல் இருந்து ஒவ்வொரு ஆண்டும் இந்த டெஸ்ட் நடக்கிறது.

1 More update

Next Story