

சென்னை,
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. இதற்கிடையில், சென்னை சூப்பர் கிங்கிஸ் அணி விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது.
சென்னை அணியின் முக்கிய வீரரான டேவாலட் பிரேவிஸ் காயம் காரணமாக இன்னும் களம் காணவில்லை. இது சென்னை அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது அடுத்த ஆட்டத்தில் வருகிற 11-ந்தேதி சென்னை சேப்பாக்கத்தில் டெல்லி கேப்பிட்டல்சுடன் மோதுகிறது. இந்த போட்டிக்குள் சென்னை அணியின் இளம் பேட்ஸ்மேன் பிரேவிஸ் உடல்தகுதி பெற்று விடுவார் என்று தலைமை பயிற்சி யாளர் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்துள்ளார்.