

புதுடெல்லி,
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தினை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கொண்டு வருவது பற்றி பரிந்துரை அறிக்கையை சமர்ப்பிக்கும்படி கடந்த 2016ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு சட்ட ஆணையத்திடம் கேட்டு கொண்டது.
கிரிக்கெட் போட்டியை ஒழுங்குப்படுத்துவதில் ஏகபோகத்துடன் பி.சி.சி.ஐ. அமைப்பு செயல்பட்ட நிலையில், அது வெளிப்படையற்ற மற்றும் பொறுப்பில்லாத ஒரு சூழ்நிலையை ஊக்குவித்து உள்ளது. இதனால் ஊடகத்தின் கண்காணிப்பின் கீழ் அது வந்துள்ளது என சட்ட ஆணையம் தெரிவித்துள்ளது..
இந்த நிலையில் சட்ட அமைச்சகத்திடம் இன்று சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், அரசியலமைப்பின் பிரிவு 12ன் கீழ் பி.சி.சி.ஐ. அமைப்பினை வகைப்படுத்திடலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.