டிராவில் முடிந்த பிரிஸ்பேன் டெஸ்ட்... சாம்பியன்ஷிப் பட்டியலில் ஏற்பட்ட மாற்றம்


டிராவில் முடிந்த பிரிஸ்பேன் டெஸ்ட்... சாம்பியன்ஷிப் பட்டியலில் ஏற்பட்ட மாற்றம்
x

Image Cortesy: AFP

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்திய அணி 3வது இடத்தில் உள்ளது.

துபாய்,

பிரிஸ்பேனில் நடைபெற்ற இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 3வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இதையடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் தென் ஆப்பிரிக்கா (63.33 சதவீதம்) முதல் இடத்தில் நீடிக்கிறது.

பிரிஸ்பேன் டெஸ்ட் டிராவில் முடிந்ததால் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளின் வெற்றி சதவீதம் குறைந்துள்ளது. இந்த ஆட்டத்திற்கு முன்னர் ஆஸ்திரேலியாவின் வெற்றி சதவீதம் 60.71 ஆகவும், இந்தியாவின் வெற்றி சதவீதம் 57.29 ஆகவும் இருந்தது. இது தற்போது 58.89 சதவீதம் (ஆஸ்திரேலியா), 55.88 சதவீதம் (இந்தியா) குறைந்துள்ளது.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் ஆஸ்திரேலியா 2ம் இடத்திலும், இந்தியா 3ம் இடத்திலும் உள்ளன. 4வது இடத்தில் நியூசிலாந்தும் (48.21 சதவீதம்), 5ம் இடத்தில் இலங்கை (45.45 சதவீதம்) அணியும் உள்ளன. 6 முதல் 7 இடங்களில் முறையே இங்கிலாந்து (43.18 சதவீதம்), பாகிஸ்தான் (33.33 சதவீதம்), வங்காளதேசம் (31.25 சதவீதம்), வெஸ்ட் இண்டீஸ் (24.24 சதவீதம்) அணிகள் உள்ளன.

1 More update

Next Story