

லண்டன்,
பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் டி20 உலக சாம்பியன்களான இங்கிலாந்து அணி வீரர்களுடன் கிரிக்கெட் விளையாடியுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதில் ஜோடர்ன், சாம் கரண் ஆகியோர் பிரதமருக்கு பந்து வீசினர். ஜோடர்ன் பந்து வீச்சில் பிரதமர் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனதை ஜோடர்ன் கொண்டாடினார். அதன் பிறகு பிரதமரும் பந்து வீசி மகிழ்ந்தார்.
மேலும், இங்கிலாந்து அணி தலைவர் ஜாஸ் பட்லர் கோப்பையுடன் பிரதமர் அலுவலகத்தில் இருக்கும் புகைப்படத்தையும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இது குறித்து பல்வேறு முன்னாள் மற்றும் தற்போதைய கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்துக்களையும், தங்களது கருத்துக்களையும் பகிர்ந்து வருகின்றனர்.
View this post on Instagram