புச்சிபாபு கிரிக்கெட்: டிராவில் முடிந்த இறுதிப்போட்டி.. ஐதராபாத் அணி சாம்பியன்


புச்சிபாபு கிரிக்கெட்: டிராவில் முடிந்த இறுதிப்போட்டி.. ஐதராபாத் அணி சாம்பியன்
x

image courtesy:twitter/@TNCACricket

இந்த தொடரின் இறுதிப்போட்டியில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் லெவன்- ஐதராபாத் அணிகள் மோதின.

சென்னை,

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் புச்சிபாபு கோப்பைக்கான அகில இந்திய கிரிக்கெட் போட்டி சென்னையில் நடந்தது. இதன் இறுதிப்போட்டியில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் லெவன்- ஐதராபாத் அணிகள் மோதின. இதில் முதல் இன்னிங்சில் முறையே ஐதராபாத் 376 ரன்னும், தமிழக தலைவர் லெவன் 353 ரன்னும் சேர்த்தன.

பின்னர் 23 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஐதராபாத் அணி 3-வது நாள் முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 14 ரன் எடுத்திருந்தது. 4-வது மற்றும் கடைசி நாளான நேற்று தொடர்ந்து பேட் செய்த ஐதராபாத் அணி 70 ரன்னுக்குள் 5 விக்கெட் இழந்து சற்று தடுமாறியது. இந்த சூழலில் ராகுல் ரதேஷ், வருண் கவுட்டுடன் இணைந்தார். இருவரும் அணியை சரிவில் இருந்து மீட்டனர். ஐதராபாத் அணி 70 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 155 ரன் எடுத்திருந்த போது ஆட்டம் ‘டிரா’ வில் முடித்துக்கொள்ளபட்டது.

இருப்பினும் முதல் இன்னிங்சில் பெற்ற முன்னிலை அடிப்படையில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றதோடு 6-வது முறையாக ‘சாம்பியன்’ பட்டத்தை தட்டிச் சென்றது. வருண் கவுட் 56 ரன்னுடனும், ராகுல் ரதேஷ் 31 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

1 More update

Next Story